என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாலம் விபத்து"
- தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
- புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் நகரில் 13 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பல கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்துள்ளது.
இது பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் இடிந்து விழுந்த 4 ஆவது பாலமாகும். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது.
- இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பீகார் மாநிலத்தில் இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- 7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படவில்லை
- பாலம் இடிந்து விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜய்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது ஒன்றும் புதிதல்ல. கடந்தாண்டு பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பாகங்களாக வெட்டி எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள படப்ஸ்கோ ஆற்றில் இருந்த இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில், அந்த பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு வந்த எட்டு தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
இந்தநிலையில், இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தின் கழிவுகளை பணியாளர்கள் முதல்முறையாக வெளியேற்றி உள்ளனர். இதில் 200 டன் மதிக்கத்தக்க பாலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆற்றில் சரிந்து விழுந்த பாலத்தை அதிநவீன உபகரணங்கள் கொண்டு சிறுசிறு பாகங்களாக வெட்டி எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாலத்தை முழுமையாக மீட்க முயற்சிக்கும் போது, அதில் சிக்கி உயிரிழந்த அனைவரின் உடல்களையும் மீட்க வாய்ப்புகள் அதிகம் ஆகும். பாலம் சரிந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
"பாலம் சரிந்து விழுந்ததில் இருந்து முதலத் முறையாக அதன் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேற்பரப்பை வெட்டி எடுக்கும் பணிகள் முழுமை பெற்றன. இதில் மீட்கப்பட்ட பாகத்தின் எடை 200 டன்கள் வரை இருக்கும்," என்று அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளர் கிம்பர்லி ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
- கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது
- கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.
இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் முன்னதாக தகவல் தெரிவித்ததால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.மேலும் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
அந்த கப்பலில் 4 ஆயிரத்து 679 கண்டெய்னர்கள் இருந்து உள்ளது. இலங்கையை நோக்கி அந்த கப்பல் சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த விபத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :-
கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர். இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.
- ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்து.
- விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது.
ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது இன்று மாலை திடீரென விபத்து ஏற்பட்டது.
அங்கு, ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும்போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
பணிகள் நடைபெறும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது விபத்து.
- போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பெரும் விபத்து தவிர்ப்பு.
சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு, ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்தில், யாருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது.
- மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது குற்றம்சாட்டி உள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாலத்தின் இரண்டு பகுதிகள் இன்று மாலை திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது யாராவது வேலை செய்துகொண்டிருந்தார்களா? என தெரியவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக பாலம் சேதமடைந்தது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கிடையே கங்கை நதியில் பாலத்தின் மையப்பகுதி கட்டப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இப்போது மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது. மேலும், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
- குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
- குஜராத்தில் ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டிருந்தார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
ஆனால் 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதற்கிடையே, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2ம் தேதி (இன்று) மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் அன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாநிலத்தில் இந்திய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
- காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் கூறினார்.
குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தை அடுத்து, மேற்கு வங்காளத்தில் உள்ள 2,109 பாலங்களில் ஆய்வு நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் புலக் ராய், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், பாலங்களின் நிலையை ஆய்வு செய்து நவம்பர் இறுதிக்குள் தேவையான கண்காணிப்புளுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் அவர், ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், சிலிகுரியில் உள்ள முடிசூட்டுப் பாலத்தையும், காங்சபதியின் குறுக்கே உள்ள பிரேந்திர சாஸ்மல் சேதுவையும் சீக்கிரம் சரிசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்த்ராகாச்சி பாலத்தை சீரமைக்க தேவையான பணிகள் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் புலக் ராய் கூறுகையில் "குஜராத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்த்த பிறகு, மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களிலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். நம்மால் அப்படி ஒரு சூழலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு எடுத்துக் கொள்ள முடியாது." என்றார்.
+2
- மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியதவி.
- மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்நிலையில் சாத் பூஜையில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் தொங்கு பாலம் மீது நடந்து சென்றுள்ளனர். இந்த பாலத்தின் மீது சுமார் 400 பேர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆற்றில் பலரும் மூழ்கினர். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தற்போதைய நிலவப்படி 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி வழங்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
- விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
- பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோ தலைநகரில் தெற்கில் அமைந்துள்ள குயர்னவாகா நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மிகவும் பிரபலமானது. இங்கு, புதிதாக தொங்கு பாலம் ஒன்றை அந்நகர மேயர் திறந்து வைத்தார்.
இந்த தொங்கு பாலம், மர பலகைகள் மற்றும் உலோக சங்கிலிகளால் சமீபத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. மேயரால் பாலம் திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் உள்பட மக்கள் சிலர் பாலத்தின் மீது நடந்து சென்றனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில், சுமார் 20 பேர் நீரோடையில் விழுந்து படுகாயமடைந்தனர். எட்டு பேருக்கு எலும்பு முறுவு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாலம் திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே பாலம் அறுந்து விழுந்த சம்பவம் மேயர் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்